கே.எம்.பணிக்கரோடு சண்டை போட்ட ம.பொ.சி.
"தமிழ்நாடு எல்லை மீட்புப் போராளி" ம.பொ.சிவஞானம் நினைவு நாள்! - (3.10.1995) 🙏🙏🙏🌹🙏🙏🙏 ==================================== "தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க மலையாளி பணிக்கருடன் சண்டை போட்ட ஐயா ம.பொ.சி! (இந்தியத் துணைக்கண்டத்தில் 1952க்குப் பிறகு மொழிவழி தாயகப் போராட்டங்கள் வெடித்த பிறகு அந்தந்த மொழி பேசும் தாயகப் பகுதிகளை கண்டறிந்து உருவாக்க பசல்அலி ஆணையம் அமைக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினர் தான் மலையாளி கே.எம்.பணிக்கர். அவர் மலையாள இன உணர்வோடு செயல்பட்டு தமிழர் தாயகப் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எப்படி கேரளாவோடு இணைத்தார் என்பதை விளக்குகிறார் ம.பொ.சி.) பணிக்கரின் வாய்ச் சண்டை நான் பஸல் அலி கமிஷனைப் பேட்டி கண்டபோது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார் - இல்லை, திரு-கொச்சி இராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் ‘வாய்ச்சண்டை’ நடத்தினார். தேவிகுளம், பீருமேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாய மென்றும், கமிஷன் அதனை ஏற்க முடியாது என்றும் பணிக்கர் ஆவேசமா...