தமிழ் மொழி மீட்புப் போராளி மாயூரம் வேதநாயகம் நினைவு நாள் 21.07.1889
‘தமிழ்மொழி மீட்பு போராளி’ மாயூரம் ச.வேதநாயகம் நினைவு நாள் 21.7.1889 ==================================== வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடுவது அக்கிரமம்! ===================================== மாயூரம் வேதநாயகம் அவர்கள் தமிழில் கவிதைகள் இயற்றும் ஆற்றல் பெற்றவர். இவர் இயற்றிய கவிதைகள் ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனை’ என்னும் பெயரில் நூல் வடிவில் வெளி வந்துள்ளன. வேதநாயகர் மாவட்ட நீதிபதி (முனிசீப்) பதவியில் இருந்து பணி புரிந்துள்ளார் . மாயூரம் (இன்றைய மயிலாடுதுறை) நகர மன்றத் தலைவர் பொறுப்பிலும் இருந்துள்ளார். அக்காலத்தில் இவர் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்னும் புதினம் தமிழ் உரை நடையில் எழுதப்பட்ட சிறந்த நூலாகும். இவரின் சம காலத்தவரான மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இராமலிங்க வள்ளலார், கோபால கிருஷ்ண பாரதியார் ஆகியோரோடு நெருங்கிய உறவும் கொண்டவர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ஆங்கில மொழி மோகம் கொண்டு வழக்கறிஞர்கள் திரிவதைக் கண்டு வேதனை அடைந்தார். ‘நீதி மன்றத்தில் தமிழ் வேண்டும்’ என்று முதன் முதலில் முழக்கமிட்ட தமிழ்ப்போராளியின் கனவு இன்னும் உயர்நீதிமன்றத்தில் நிறைவேறாமலே உள்ளது. தம...