சாதிப்பெயரை விடுதலை ஏட்டில் போட்டு மகிழ்ந்த ஈ.வெ.இராமசாமி!
சாதிப் பெயரை விடுதலை ஏட்டில் போட்டு மகிழ்ந்த ஈ.வெ.இராமசாமி! =================================== கோயம்புத்தூர் மேம்பாலத்திற்கு "ஜி.டி.நாயுடு " என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தது குறித்து சமூக ஊடகங்களில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது. எதற்கெடுத்தாலும் இது "பெரியார் மண்" என்று சொல்லக்கூடிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சாதிப் பெயர்கள் மீது மண் மூடி போட்டு புதைக்க விரும்பாதவர். சாதிப் பெயர்கள் இருந்தால் தான் சாதி ஓட்டுகள் நமக்கு விழும் என்று கருதுகிறார். அதனால்தான் "ஜி.டி.நாயுடு" என்று துணிச்சலாக அவரால் அறிவிக்க முடிகிறது. இது ஈ.வெ.இராமசாமிக்கு ஸ்டாலின் செய்கிற துரோகம் என்று தயவுசெய்து கருதி விட வேண்டாம். ஈ.வெ.இராமசாமியே சாதி ஒழிப்பு விசயத்தில் நடைமுறையில் இரட்டை வேடம் போட்டவர் தான். சாதி ஒழிப்பு போராளி என்று தன்னை அறிவித்துக் கொண்ட ஈ.வெ.ராமசாமி தன்னைத் தவிர எவரும் சாதி ஒழிப்பில் கிடையாது என்று காட்டுவதற்காகவே மற்றவரை சாதிப் பெயரை விடுதலை ஏட்டில் போட்டு மகிழ்வார். ஈ.வெ.ராமசாமி சாதிப் பெயர் போட்டு விடுதலை ஏட்டில் மகிழ்ந்த ஒருவர்தான் ஜி.டி. நாய...