தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்! - தமிழறிஞர் மா. இராசமாணிக்கனார்
தமிழ்நாட்டு வட எல்லையை மீட்க வேண்டும்! - தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் ============================= அன்றைய சென்னை மாகாணத்தில் சென்னை மற்றும் சென்னைக்கு அப்பால் இருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, நெல்லூர், சித்தூர் போன்ற தமிழர் பகுதிகளை ஆந்திரர்கள் அபகரிக்க முயன்றனர். இதற்கு எதிராக 1946 ல் தமிழரசுக் கழகத்தை தோற்றுவித்து ம.பொ.சிவஞானம் போராட்டத்தை தொடங்கினார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் சங்க இலக்கியம், வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டு ஆதாரங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வடக்கெல்லை பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் தமிழறிஞர் மா.இராசமாணிக்கனார் அவர்கள். 1948 ல் அவர் எழுதிய "தமிழ்நாட்டு வட எல்லை" நூல் வடக்கெல்லை மீட்புப் போராட்டத்திற்கு பேருதவி புரிந்தது. 103 பக்கங்கள் கொண்ட அந்நூலின் கடைசி அத்தியாயத்தில் " " தமிழர் கடமை " என்ற தலைப்பில் எழுதிய பகுதியை தந்துள்ளேன். மா.இராசமாணிக்கனார் அவர்கள் ஆந்திரர்களை தமது சொந்த இனத்து சகோதரர்களாக கருதிய அதே வேளையில், தமிழர்களுக்குரிய தாயகப் பகுதிகளை மீட்க வேண்டும் என்ற வேட்கையை அந்நூலில் வெளிப்படுத்தியிர...