மே நாள் வாழ்த்துகள்! தமிழராய் இணைவோம்!

தமிழராய் இணைவோம்! 
மே நாள் வாழ்த்துகள்! 
============================

உலகத் தொழிலாளர்களே! ஒன்று சேருங்கள்! 

- என்று தமிழ்நாட்டில் உள்ள இடது- வலது பொதுவுடைமையர் மே நாள் கொடியேற்ற - கூட்ட நிகழ்வுகளில் முழங்குகின்றார்கள்.

இது தவறான மொழி பெயர்ப்பாகும்.

 கார்ல் மார்க்ஸ் - பிரடெரிக் ஏங்கல்ஸ் வெளியிட்ட பொதுவுடைமைக் கட்சி அறிக்கை செர்மன் மூலத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதில்  ”Working Men of All Countries, Unite!” என்று தான் உள்ளது. 

அதன் பிறகு பிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஒப்புதலுக்குப் பிறகு முதல் ஆங்கில மொழிபெயர்ப்பில் ”Workers of all countries, unite!” என்று மொழி பெயர்க்கப்பட்டது.

இது தமிழில் இப்படித்தான் மொழி பெயர்த்து  இருக்க வேண்டும்.

“அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்றுபடுங்கள்!”

பாட்டாளிக்கு மொழியும் உண்டு, இனமும் உண்டு, தேசமும் உண்டு என்பதை ஏற்கும் வகையில் தான் "அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே ! " என்று விளிக்கப்படுகிறது.

ஆனால் பாட்டாளிக்கு மொழி இல்லை, இனமில்லை, தேசமில்லை என்று இங்குள்ள இடது- வலது பொதுவுடைமைக் கட்சிகள் கூப்பாடு போடுவது மூலம் பாட்டாளி ஒற்றுமையை கட்ட முடியாது என்பதே உண்மை ‌.

தேசிய இனத்திற்குள் தான் பாட்டாளி வர்க்கம் உண்டே தவிர, தனித்த பாட்டாளி வர்க்கம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. பாட்டாளி என்பவன்  தன்னை தமிழராய் உணர்வதே குறுகிய மனப்பான்மை என்று தவறாக கற்பிக்கப்படுகிறது.

இந்திய துணைக்கண்டத்தில் தமிழராய் நின்று தேசிய இனங்களின் சமத்துவத்தை கோராத பாட்டாளி வர்க்க ஒற்றுமை என்பது சாத்தியமற்றது என்பதை பொதுவுடைமைக் கட்சிகள் புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ? 

- கதிர் நிலவன்

Comments

Popular posts from this blog

சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய பெரியார்

சித்தூர் கிளர்ச்சியை விட பிள்ளையார் சிலை உடைப்பே எனக்கு முக்கியம்! - - -பெரியார் ஈ.வெ‌.இராமசாமி

தமிழ் ஊர்ப் பெயர்களை அழித்த நீதிக்கட்சி முதல்வர் பொப்பிலி அரசர் !