ஆங்கிலத்தை தாய்மொழி என்பதா? ஈ.வெ.இராமசாமிக்கு பாரதிதாசன் கண்டனம்!
ஆங்கிலத்தை தாய்மொழி என்பதா? ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் விழாவில் பாரதிதாசன் எதிர்ப்பு..! சிலம்புச்செல்வர் ம.பொ.சி . 57வது பிறந்த நாள் விழா 26.8.1963 இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. அதில் குன்றக்குடி அடிகளார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்றனர். (புகைப்படம் மேலே) அதில் பாரதிதாசன் நிகழ்த்திய தலைமையுரையின் சுருக்கம் வருமாறு: சிவஞானம் என்ற பெயரில் இந்த நாட்டில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் நம் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்கள் தமிழர்களின் நெஞ்சை விட்டு அகலாதவர். அந்த அளவுக்கு தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காக தொண்டு செய்து வருகிறார். இப்போது தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்குத் தொண்டு தேவைப்படுகிறது. மற்றவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்க அவசியம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் அடைந்து வரும் இன்னல் சிறிதன்று, இந்த நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட தமிழுக்காகப் பரிந்து கேட்க முன் வரவில்லை. தமிழ்மொழிக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டு காலமாக தமிழ் நெருக்கடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் அந்த நெருக்கடி அற்றுப்...