Posts

Showing posts from December, 2024

தமிழும் - திராவிடமும் - கி.ஆ.பெ‌.விசுவநாதம் முத்தான 30 பதில்கள்!

Image
"முத்தமிழ்க் காவலர்" கி.ஆ.பெ . விசுவநாதம் நினைவு நாள் 19.12.1994 ================================== 1. தமிழ் என்பது ஒரு நல்ல தமிழ்ச் சொல். திராவிடம் என்பது அழுத்தமான வடமொழிச் சொல் .2. திராவிடம் என்ற சொல்லே திரிந்து "தமிழ்" என்று ஆயிற்று என்பது தமிழ் பற்றாளர் சிலரது கூற்று. இது அவரவர் மொழிப்பற்றை காட்டுமேயன்றி உண்மையைக் காட்டாது- 3. பழைய சங்க காலத்திய தமிழ் நூல்கள் அனைத்திலும் "திராவிட" என்ற சொல் ஒன்று கூட இல்லை. 4. சங்க காலத்திற்குப் பின்னும், 700 ஆண்டுகளுக்கு முன்னும் தோன்றிய இன்றும் இருக்கும் எந்த நூலிலும் திராவிடம் என்ற சொல் இல்லை. 5.  650 ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வரலாற்று காலத்தில் தான் வரலாறு எழுதிய ஆங்கிலேயரும், ஆங்கிலேயரைப் பின்பற்றி ஆரியரும் தமிழரை தமிழ் நாட்டை தமிழ்மொழியை மட்டுமல்லாமல் தமிழ் இனத்தையும், தமிழ் இனத்தின் மொழிகளையும் சேர்த்து "திராவிடம் " எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர். 6. தமிழருக்கும், தமிழ் இனத்தாருக்கும் திராவிடர் எனப் பெயரிட்டு வரலாறு எழுதிய ஆங்கிலேயருக்கு அறிவித்தவர்கள் அக்காலத்தில் நன்கு கற்றறிந்த ஆரியர்களே! ...

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதால் உன் தமிழ்த்தாய்க்கு கொம்பு முளைக்குமா? - ஈ.வெ.இராமசாமி

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதால் உன் தமிழ்த் தாய்க்கு கொம்பு முளைக்குமா? - ஈ.வெ.ராமசாமி =====================================  இங்கு கூட தமிழ் தாய் வாழ்த்துப் பாடினார்கள். - எதற்காக ? நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்து விடுமா ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ் தாய் வாழ்த்து .  ஒரு முட்டாள்தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள்தனமா ? நாறுகிறது எடுத்தெறி என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்று கேட்பதா ? ஏன் வைக்க வேண்டும் - அந்த இடத்தில் சாணியைப் போட்டு மெழுக வேண்டியது தானே ? உன் தமிழ்த்தாய் 2000 வருடமாக இருக்கிறாளே ! - அதனாலே உனக்கு என்ன லாபம் ? கல்வி வளர்ந்ததா ? தகுதி வளர்ந்ததா ? தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுகிறாயே ! எந்த வெள்ளைக்காரனாவது "இங்கிலீஷ்" வாழ்த்துப் பாடுகிறானா?   வெங்காய வாழ்த்து =============================  வேண்டுமானால் அரசு வாழ்த்துப்பாடேன். உன்னை இந்தத் தகுதிக்கு உயர்த்திய அரசாங்கத்தை நன்றியோடு வாழ்த்துப் பாடினாலும் பொருளுண்டு. அதை விட்டு விட்டு தமிழ்த்தாய் வாழ்த்து, வெங்காய வாழ்த்துப் பாடுகிறாயே ? இது பு...