Posts

Showing posts from May, 2025

வடக்கெல்லைப் போராளி தளபதி கே.விநாயகம் பிறந்தநாள் 27.5.1914

Image
வடக்கெல்லை மீட்பு போராட்டத் தளபதி கே.விநாயகம் பிறந்த நாள்  27.05.1914 ======================================= மொழிவழித் தாயக மீட்புப் போரில்  வடக்கெல்லையில் ஆந்திரர்களின் தமிழர் மண் பறிப்புக்கு எதிராக மிகத் தீவிரமாகப்  போராடியவர். சட்டமன்றத்திலும் சித்தூர் மண்ணை மீட்டிடவும் வாதாடியவர் தளபதி கே.விநாயகம் . தமிழக எல்லைப் மீட்புப் போராளி தளபதி விநாயகம் புகழ் ஓங்கட்டும்! ம.பொ.சி.யோடு இணைந்து போராடிய தளபதி கே.விநாயகம்அவர்களின் சட்ட மன்ற உரைகளின் சுருக்கம். "சித்தூர் மாவட்டம் ஆந்திரர்களின் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் சித்தூர் மாவட்டம் பல மொழியினர் கூடி வாழும் மாவட்டம் ஆகும்.  தமிழர்களே பெருவாரியாக இங்கு வாழ்கின்றனர். ஆனாலும் தாலுகா அலுவலகங்கள், போலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றில் தெலுங்கில் மட்டுமே ஆவணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.  கடந்த 1908-ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் விளைவாக அங்கு வாழும் தமிழர்களுக்கு தங்கள் தாய்மொழியைக் கற்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது....

கண்ணகி கோயில் தமிழருக்கே சொந்தம்!

Image
கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்! ====================================== சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்! ====================================== தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று  தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது .  ஒவ்வொரு ஆண்டும்  இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான்  ஒரு நாள் மட்டும் "கண்ணகி சித்திரைப் பெருவிழா" அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பக...