கள் குடிப்பது சினிமாவை விட தீமை அல்ல! - ஈ.வெ.இராமசாமி
ஈ.வெ.இராமசாமியை கைவிட்ட
ஈ.வெ.இராமசாமி சீடர்கள்!
===================================
கள்ளு விஷயத்தில் ஈ.வெ.ராமசாமி சீடர்கள் எல்லாம் வள்ளுவர் பக்கம் சாய்ந்து விட்டார்கள். ஏனெனில், சீமானை எதிர்ப்பதற்கு அதை விட்டால் அவர்களுக்கு வேறு ஆயுதம் எதுவுமில்லை.
ஈ.வெ.இராமசாமி சீடர்கள் கள்ளுண்ணாமை குறித்து பாடம் எடுப்பதைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.
கறுப்புச் சட்டை வீரமணி முதல் கடைசி ஈ.வெ.இராமசாமியின் முரட்டு பக்தர்கள் வரை எப்போதும் சொல்வது ஒன்றுதான்.
"சொந்த புத்தி தேவையில்லை, பெரியார் தந்த புத்தியே போதும்" என்பதுதான்.
கள்ளு விஷயத்தில் ஈ.வெ.ராமசாமி புத்தியை பயன்படுத்தினால் பூமராங் போல அது திரும்பி நம்மையே தாக்கி விடும் என்பதால் சொந்த புத்தியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
ஏனெனில் ஈ.வெ.இராமசாமி கள்ளை எதிர்த்து தென்னை மரம் வெட்டிய கதையை பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்தவர்கள் எல்லாம் வளர்ந்து தற்போது விடுதலை படிக்கத் தொடங்கி விட்டார்கள்.
அவர் இறுதிக் காலத்தில்
ஒரு கையில் மதுவையும், மற்றொரு கையில் கள்ளையும் தூக்கித்தான் காட்ட வில்லை. அதைத் தவிர, அந்தளவுக்கு மதுவையும், கள்ளையும் ஆதரித்துப் பேசியுள்ளார். அவர் பேசியதில் சில துளிகள் கீழே:
"சினிமாவுக்கு போகும் அயோக்கியத்தனத்தை விடவா கள்ளு குடிப்பது தீமை"
“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.”
“பத்து கள்ளுக்கடைகள் மூடப்படுவது ஒரு கோயிலைத் திறப்பதற்குச் சமம். கோயிலை மட்டும் வைத்துக் கொண்டு கள்ளுக்கடைகளை மூட வேண்டுமா?”
“தீபாவளிக்கு லீவு விடுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதை விட இரண்டு பங்கு முட்டாள் தனம் மதுவிலக்கு எடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும்.”
இப்போது புரிகிறதா? ஏன், ஈ.வெ.ரா. சீடர்கள் வள்ளுவர் பக்கம் தாவினார்கள் என்று.
அந்தக் காலத்தில் "கள்ளுண்ணாமை" பற்றி வள்ளுவர் பாடியிருக்கிறார் என்று கூறும் இவர்கள் டாஸ்மாக் மது குறித்து எப்போதும் வாயைத் திறந்ததே இல்லை.
ரொம்பவும் அதட்டிக் கேட்டால் ஈ.வெ.ரா. சீடர்கள் வள்ளுவர் எந்தக் குறளிலாவது "டாஸ்மாக் மது குடிக்காமை" குறித்து பாடியிருக்கிறாரா? என்று நம்மையே மடக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு
ஒன்றுமில்லை.
Comments
Post a Comment