Posts

Showing posts from June, 2025

ஆங்கிலத்தை தாய்மொழி என்பதா? ஈ.வெ.இராமசாமிக்கு பாரதிதாசன் கண்டனம்!

Image
ஆங்கிலத்தை தாய்மொழி என்பதா? ம.பொ.சிவஞானம் பிறந்தநாள் விழாவில் பாரதிதாசன் எதிர்ப்பு..! சிலம்புச்செல்வர் ம.பொ.சி . 57வது பிறந்த நாள் விழா 26.8.1963 இல் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. அதில் குன்றக்குடி அடிகளார்,  புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோர் பங்கேற்றனர். (புகைப்படம் மேலே) அதில் பாரதிதாசன் நிகழ்த்திய தலைமையுரையின் சுருக்கம் வருமாறு: சிவஞானம் என்ற பெயரில் இந்த நாட்டில் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் நம் சிலம்புச் செல்வர் சிவஞானம் அவர்கள் தமிழர்களின் நெஞ்சை விட்டு அகலாதவர். அந்த அளவுக்கு தமிழுக்காக, தமிழகத்துக்காக, தமிழருக்காக தொண்டு செய்து வருகிறார். இப்போது தமிழுக்கு, தமிழகத்துக்கு, தமிழருக்குத் தொண்டு தேவைப்படுகிறது. மற்றவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்க அவசியம் இல்லாமல் இருக்கிறது. தமிழ் அடைந்து வரும் இன்னல் சிறிதன்று, இந்த நாட்டை ஆளும் பொறுப்பில் உள்ளவர்கள் கூட  தமிழுக்காகப் பரிந்து கேட்க முன் வரவில்லை. தமிழ்மொழிக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டு காலமாக தமிழ் நெருக்கடியில் தான் இருந்து வருகின்றது. இன்னும் அந்த நெருக்கடி அற்றுப்...

கள் குடிப்பது சினிமாவை விட தீமை அல்ல! - ஈ.வெ.இராமசாமி

Image
ஈ.வெ.இராமசாமியை கைவிட்ட  ஈ.வெ.இராமசாமி சீடர்கள்!  =================================== கள்ளு விஷயத்தில் ஈ.வெ.ராமசாமி சீடர்கள் எல்லாம் வள்ளுவர் பக்கம் சாய்ந்து விட்டார்கள். ஏனெனில், சீமானை எதிர்ப்பதற்கு அதை விட்டால் அவர்களுக்கு வேறு ஆயுதம் எதுவுமில்லை.  ஈ.வெ.இராமசாமி சீடர்கள் கள்ளுண்ணாமை குறித்து பாடம் எடுப்பதைப் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. கறுப்புச் சட்டை வீரமணி முதல் கடைசி ஈ.வெ.இராமசாமியின் முரட்டு பக்தர்கள் வரை எப்போதும் சொல்வது ஒன்றுதான்.  "சொந்த புத்தி தேவையில்லை, பெரியார் தந்த புத்தியே போதும்" என்பதுதான். கள்ளு விஷயத்தில் ஈ.வெ.ராமசாமி புத்தியை பயன்படுத்தினால் பூமராங் போல அது திரும்பி நம்மையே தாக்கி விடும் என்பதால் சொந்த புத்தியை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.  ஏனெனில் ஈ.வெ.இராமசாமி கள்ளை எதிர்த்து தென்னை மரம் வெட்டிய கதையை பள்ளிப் பாடப்புத்தகத்தில் படித்தவர்கள் எல்லாம் வளர்ந்து தற்போது விடுதலை படிக்கத் தொடங்கி விட்டார்கள். அவர் இறுதிக் காலத்தில்  ஒரு கையில் மதுவையும், மற்றொரு கையில் கள்ளையும் தூக்கித்தான் காட்ட வில்லை. அதைத் தவிர, அந்தளவு...

திராவிடம் மறுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Image
திராவிடம் மறுத்த பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ================================= "திராவிடம் என்பது ஒரு மாயை" என்பதற்கும், "தேசிய இந்தியம்" பொய் என்பதற்கும், காவிரி நீரைத் தர மறுக்கும் கர்நாடகமே சான்று என்று கூறியவர் நம் பாவலரேறு பெருஞ்சித்திரனார். தமிழின் சேய்மொழி திராவிட மொழி  அல்லது  தமிழின் உடன் பிறந்தமொழி திராவிட மொழி - என்ற பெயரால்  கன்னடத்தோடு உறவு கொண்டாடி திராவிடத்தை தமிழர் மீது திணிக்கும் சூழ்ச்சியை சில போலி தமிழ்த் தேசியவாதிகள் செய்து வருகின்றனர். கன்னடர்கள் நம் திராவிடச் சகோதரர்கள் என்றால் கன்னட நாட்டிற்கு சென்று பாடம் நடத்தட்டும்!  கன்னடர்கள் நம் திராவிடச் சேய் என்றால் காவிரி நீரை நமக்கு கன்னட நாட்டிற்கு சென்று பெற்றுக் கொடுக்கட்டும்! தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதை உரக்கச் சொல்வோம். பாவலரேறு பெருஞ்சித்திரனார் தென் மொழியில் எழுதிய பாடல் உணர்த்தும் செய்தி இதுதான்.  தமிழ்நாடு தமிழர்க்கே! =============================== தமிழர்க்குத் திராவிடம் என்பதோ அயன்மை!  தமிழருக்(கு) இந்தியம் என்றுமே எதிர்மை!  தமிழ...

ஆதி திராவிடன் என்பது வரலாற்றுப் பிழை! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

Image
"ஆதி (பழந்) தமிழன்"   என்பதே சிறப்பு! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்  ====================================== * "ஆதி திராவிடன்" என்பது வரலாற்றுப் பிழை! * " அரிஜன் " என்பது காந்தியின் ஏமாற்று! * " தாழ்த்தப்பட்டவன்" என்பது தன்மானமின்மை! * " தலித் " என்பது தமிழின இழப்பு * " பழந்தமிழன்" என்பதே சிறப்பும் பெருமையும்! * 'ஆதி ஆந்திரன் '  ' ஆதி கன்னடன் ' ' ஆதி கேரளன் ' - என்று பிறர் தம்மைச் சுட்டும் பொழுது,  " ஆதி (பழந்) தமிழன் என்பதே சிறந்தது! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்  தமிழ் நிலம், ஏப்ரல் -மே 1994 ================================= - கதிர் நிலவன்  Tamilthesiyan.wordpress.com