கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்!
கண்ணகி கோயிலை தமிழருக்கே சொந்தமாக்குவோம்! =========================== சித்திரை முழுநிலவு நாளில் உறுதியேற்போம்! ============================ தமிழ்நாட்டின் முல்லைப்பெரியாறு ஆற்றுநீர் உரிமையை பறிக்கும் மலையாளிகளின் அரம்பத்தனத்தை அனைத்துத் தமிழரும் அறிவோம். ஆனால் தமிழர்களுக்குச் சொந்தமான கண்ணகி கோயிலை அபகரிக்க முயலும் மலையாளிகளின் சூழ்ச்சியை தமிழர்கள் இதுவரை அறியாதவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழு நிலவு நாளன்று தேனி மாவட்டம் கூடலூர் மலையில் உள்ள கண்ணகி கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். அங்கு கேரள அரசின் கெடுபிடி காரணமாக முழுச்சுதந்திரோடு தமிழர்கள் வழிபாடு நடத்த முடியாது . ஒவ்வொரு ஆண்டும் இடுக்கி மாவட்ட ஆட்சியரும், தேனி மாவட்ட ஆட்சியரும் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு தான் ஒரு நாள் மட்டும் "கண்ணகி சித்திரைப் பெருவிழா" அங்கு நடத்தப்படுகிறது. மொத்தத்தில் 9 மணி நேரம் மட்டுமே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது. அங்கு மலையாள பக்தர்களிடம் காட்டும் பரிவு தமிழக பக்தர்களிடம் காட்ட மாட்டார்கள். காரணம் கண்ணகி கோயில் தங்கள் நிலப்பகுதியில் இருப்பதால் தங்களுக்கே சொந்...