Posts

Showing posts from December, 2025

அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.

Image
அன்னியரான பார்ப்பனர் - துலுக்கருக்கு இங்க என்ன உரிமை! -ஈ.வெ.இராமசாமி ==================================== எத்தனை முறை ஈ.வெ.ரா.வை பற்றி எடுத்துச் சொன்னாலும், ஈ.வெ.ரா.வின் அடிப்பொடிகள் திருந்த மறுக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் " என் தலைவர் பெரியாரே, தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டி" என்று ஜீனியர் விகடன் இதழில் பேட்டி தந்துள்ளார். தமிழ் மொழி எதிர்ப்பாளர், தமிழின மறுப்பாளர் ஈ.வெ‌.ரா. ஒருபோதும் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாக இருக்க முடியாது.  அவரின் உரையாடல், எழுத்து, பேச்சு எவற்றிலும் தமிழ்மொழி, தமிழர் இனம், தமிழர் தாயக மறுப்பு ஆகியவற்றை அவர் நடத்திய விடுதலை ஏட்டையே சான்றாகத் தந்து பலமுறை எழுதியுள்ளோம். பிராமணீய இந்திய அரசு இசுலாமிய சமூகத்தை எப்படி அணுகுகிறது என்பதை ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. இந்தியாவை இந்து சாம்ராஜ்யமாக மாற்றிட இசுலாமியர்கள் தடையாக இருப்பதால், இசுலாமிய மக்களை அந்நியராகக் கூறி, இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதுதான் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார கும்பலின் திட்டமாகும்.  இந்த திட்டத்தை வழி மொழியும் ஒருவராக ...

தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு இல்லையே! - சுப்பிரமணிய பாரதியார்

Image
தெலுங்கனுக்கு உள்ள உணர்ச்சி தமிழனுக்கு  இல்லையே...!  நெல்லூர் மாஹானசபையில் வந்தே மாதரம் பாடவில்லை....! 'தமிழ்க்கவி' சுப்பிரமணிய பாரதியார் வேதனை! ============================== சென்ற வெள்ளிக்கிழமை (1917) சூன் 1 யன்று நெல்லூரில் கூடிய ஆந்திர மஹாசபையில் சபாநாயகர் ஸ்ரீ வெங்கடப்பய்ய பந்துலு செய்த உபந்யாஸம் கவனிக்கத் தக்கது. ராஜநீதி சாஸ்த்திரத்தில் தெலுங்கர் நெடுங்காலத்துப் பெருமையுடையார். பாடலிபுத்ர நகரத்தில் நடந்த ஆந்திர ராஜ்யமும் பிற்காலத்தில் தமிழ் நாட்டைக் கட்டியாண்ட விஜயநகரத்து ராஜ்யமும் கீர்த்தி மிகுந்தனவன்றோ? தெலுங்கர் தமிழரை ஆண்ட அடையாளங்கள் நமது பாஷையிலும் ஆகாராதிகளிலும் அழிக்க முடியாதபடி பதிந்து கிடக்கின்றன.  நமது ஸங்கீதமும் நாட்டியமும் தெலுங்கிலேயே இன்றுவரை முழுகிக் கிடக்கின்றன. பாடகர்கள் பாடும் கீர்த்தனங்கள், தாசிகள் ஆட்டத்தில் பாடும் வர்ணங்கள் ஜாவளிகள் முதலியவற்றில் நல்ல உருப்படியெல்லாம் தெலுங்கு. நமது கிராமங்களிலுள்ள தெலுங்க ரெட்டிகளும், நாயுடுமாரும், ஆந்த்ர பிராமணப் புரோகிதர்களும், தெலுங்கு தாசிகளும் ராயர் சம்ஸ்தான காலத்தில் இங்கே உறுதி பெற்றவர்கள். நமது விவாக க...

உடைபடும் ஈ. வெ.ரா.வின் போலி பிம்பம்!

Image
உடைபடும் ஈ.வெ.ரா.வின் போலி பிம்பம்! 2009 முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு பெரும் வீச்சாக எழுந்த திராவிட எதிர்ப்புக் கருத்தியல் தற்போது பெரும் பாய்ச்சலை நோக்கி முன்னேறியுள்ளது. ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த முன்வராத திராவிடத்தால் தில்லி அரசால் தமிழர்கள் இழந்த உரிமைகளை காக்க முன்வராது என்று உணர்ந்த இளையோர் பட்டாளம் தமிழின அடையாளத்தை மறைக்கும் திராவிடத்தை மட்டும் விட்டு வைக்க வில்லை; அதை திட்டமிட்டு பரப்பிய திராவிடப் பிதாமகன் ஈ.வெ.ரா.வின் போலி பிம்ப அரசியலையும் சமூக ஊடகங்களில் உடைக்கத் தொடங்கி விட்டனர். ஆரியத்துவா மோடி அரசை வெளியில் எதிர்ப்பதைப் போல பாவனை செய்து அதனோடு திரைமறைவில் கள்ள உறவு வைத்துள்ள திராவிட மாடல் அரசு ஈ.வெ.ரா.வின் பிம்பத்தைக் காட்டி தமிழ்த் தேசிய உரிமைக்கான போராட்ட எழுச்சியை வளரவிடாமல் அச்சுறுத்தி வருகிறது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தமிழின அடையாளத்தை மறுக்கும் ஈ.வெ.ராவின் திராவிடக் கருத்தியலுக்கு எதிராக தொடர்ந்து தக்க சான்றுகளோடு எழுதியும், சமூக வலைதளங்களில் பேசியும் வருகிறார்.  தலைவர் பெ.மணியரசன் அவர்களை தர்க்...

விருதுகளுக்கு தலை வணங்காப் போராளி பாவலர் இன்குலாப்!

Image
விருதுகளுக்கு தலை வணங்காப் போராளி பாவலர் இன்குலாப்! =========================== தமிழ் இலக்கிய உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளுள் முதன்மையானவர்கள் கவிஞர்கள் இன்குலாப்பும், ஈரோடு தமிழன்பனும் ஆவார்கள். இதில் கவிஞர் இன்குலாப் இடதுசாரி சிந்தனை மரபில் ஊறி வளர்ந்தவர். மார்க்சிய - லெனினிய வழியில் தமிழ்த் தேசிய விடுதலை பேசியவர். தமிழீழ விடுதலையை முழு மூச்சாக ஏற்றுக் கொண்டவர். தமிழீழ தேசியத் தலைவரை நேரில் சந்தித்து நான் சந்தித்த தலைவர்களில் சிறந்த தலைவர் என்றவர். ஒடுக்கப்பட்ட மக்கள், அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்கள் பக்கம் நின்று ஓங்கி குரல் எழுப்பியவர் . ஆளும் அரசுகளின் ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமரசமற்ற போராளி.  கவிஞர் ஈரோடு தமிழன்பன் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களில் ஒருவர். புதுக் கவிதை மரபில் தமிழ் மறுமலர்ச்சிக்குப் பங்காற்றியவர். தொழிலாளர் உரிமை, திராவிட இயக்க சீர்திருத்த சிந்தனைகளை வரித்துக் கொண்டவர். தமிழ்த் தேசியத்தை விட்டுக் கொடுக்காதவர். ஈழ விடுதலைக்கு குரல் கொடுத்தவர். தமிழ்த் தேசிய தன்னுரிமை மாநாட்டில் ஈழ விடுதலைக்கு எதிரான இந்திய தேசியத்தை தோலுரித்து குரல் ...