Posts

Showing posts from January, 2026

எங்கள் பரம்பரை விஜயநகரப் பரம்பரை என்று ஈ. வெ. ரா. சொல்லும் போது நாங்கள் மட்டும் மூவேந்தர் பரம்பரை என்று சொல்லக் கூடாதா?

Image
எங்கள் பரம்பரை விஜய நகரப் பரம்பரை என்று ஈ.வெ.ரா. சொல்லும் போது , நாங்கள் மூவேந்தர் பரம்பரை என்று பேசக் கூடாதா? தோழர் திருமாவளவனுக்கு பதில்! ============================= தோழர் திருமாவளவன் தமிழ் மன்னர்களை சீண்டும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வில் தேவையில்லாமல் மூவேந்தர்களை வம்புக்கு இழுத்துள்ளார். தமிழ் மன்னர்கள் காலத்தில் தான் நாடு குட்டிச் சுவர் ஆனது. வடமொழியும், பிராமண ஆதிக்கமும் வந்தது , இராஜராஜ சோழன் பெயர் தமிழ்ப் பெயரா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியுள்ளார்.  பல்லவர்கள் காலத்தில் பிராமண ஆதிக்கமும், வடமொழியும் கோலோச்சின. பல்லவர்கள் காலத்திற்கு பின் வந்த தமிழ் மன்னர்கள் காலத்தில்தான் பிராமண ஆதிக்கமும், வடமொழி ஆதிக்கமும் கட்டுப்படுத்தப்பட்டது . இந்த உண்மையை எத்தனை முறை வரலாற்று ஆதாரங்களோடு சொன்னாலும் கோயபல்ஸ் வேலையை திருமாவளவன் கைவிடுவதாக இல்லை. மூவேந்தர்கள் மீது அவதூறு செய்வதில் ஈ.வெ.ரா. பேசிய திராவிடத்திற்கு சற்றும் சளைத்ததல்ல திருமாவளவன் பேசும் தலித்தியவாதம்.  இராசராச சோழனுக்கு அருண்மொழி வர்மன் என்ற பெயரும், இராசேந்திர சோழனுக்கு மது...

சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய பெரியார்

Image
சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய ஈ.வெ.ரா. ========================= 1965ஆம் ஆண்டு சனவரி 26ஆம் நாளில்  இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்திமொழி அமலாகும் என்று அறிவிக்கப்பட்டது.  இதற்கு முன்பே தமிழ்நாட்டில் இந்தி மொழி ஆட்சி மொழியானால் தமிழுக்கு ஆபத்து நேரும் என்பதை தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இந்தி திணிப்புக்கு எதிராக திமுக தலைவர் அண்ணா உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பரப்புரை செய்து வந்தனர். அன்றைய காலத்தில் தென்வியட்நாமில் நடைபெற்ற கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக புத்த பிக்குகள் தீக்குளித்து தமது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதை செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொண்ட அரியலூர் கீழப்பழுவூர் ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற இளைஞர் தமிழ்மொழி காக்க தீக்குளிப்பதைத் தவிர வேறு வேறு வழியில்லை என்பதை உணர்ந்தார்.    அதற்கு முன்பு நண்பர் நாகராசனுக்கும் குடும்பத்தினருக்கும் இரண்டு கடிதங்கள் எழுதினார். "தமிழ் வாழ வேண்டும் என்று நான் சாகின்றேன்.. இதை நான் திருச்சியிலிருந்து எழுதுகிறேன். என்னை மன்னித்து வாழ்த்தி வழியனுப்புங்கள். தமிழ் வாழ வேண்டும் என நான் செய்த காரியம் வெல்லும்".     ...