கே.எம்.பணிக்கரோடு சண்டை போட்ட ம.பொ.சி.

"தமிழ்நாடு எல்லை மீட்புப் போராளி" ம.பொ.சிவஞானம் நினைவு நாள்! - (3.10.1995) 🙏🙏🙏🌹🙏🙏🙏
====================================
"தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்டெடுக்க மலையாளி பணிக்கருடன் சண்டை போட்ட ஐயா ம.பொ.சி!

(இந்தியத் துணைக்கண்டத்தில் 1952க்குப் பிறகு மொழிவழி தாயகப் போராட்டங்கள் வெடித்த பிறகு அந்தந்த மொழி பேசும் தாயகப் பகுதிகளை கண்டறிந்து உருவாக்க பசல்அலி ஆணையம் அமைக்கப்பட்டது. அதில் ஒரு உறுப்பினர் தான் மலையாளி கே.எம்.பணிக்கர். அவர் மலையாள இன உணர்வோடு செயல்பட்டு தமிழர் தாயகப் பகுதிகளான தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எப்படி கேரளாவோடு இணைத்தார் என்பதை விளக்குகிறார் ம.பொ.சி.)

பணிக்கரின் வாய்ச் சண்டை நான் பஸல் அலி கமிஷனைப் பேட்டி கண்டபோது, அக்கமிஷன் அங்கத்தினரான கே.எம்.பணிக்கர் என்னிடம் சுமார் அரைமணி நேரம் உரையாடினார் - இல்லை, திரு-கொச்சி இராஜ்யத்திலுள்ள தமிழ்த் தாலுக்காக்கள் பற்றி என்னுடன் ‘வாய்ச்சண்டை’ நடத்தினார். 

தேவிகுளம், பீருமேடு தாலுக்காக்களைத் தமிழகத்துடன் இணைக்குமாறு தமிழரசுக் கழகம் கோருவது அநியாய மென்றும், கமிஷன் அதனை ஏற்க முடியாது என்றும் பணிக்கர் ஆவேசமாகக் கூறினார். 

அவரது போக்கு எனக்கு வியப்பைத் தந்தது. அதனால் நான், “தாங்கள் மலையாளிகள் சார்பில் என்னுடன் வழக்காடுகிறீர்களா? அல்லது கமிஷன் உறுப்பினர் என்ற வகையில் என்னை விசாரணை நடத்துகிறீர்களா?” என்று கேட்டேன். 

இதன் பின்னர், பணிக்கரின் ஆவேசம் தணிந்தது. தமக்கு ஏற்பட்ட ஆவேசத்திலே தம்மை மறந்தவராகி, தேவிகுளம் - பீருமேடு பகுதியிலே தமக்குச் சொந்தமான தோட்டங்கள் இருப்பதாகவும் பணிக்கர் கூறினார்.

 “அவற்றை நான் எப்படி தமிழ்நாட்டிடம் விட்டுவிட முடியும்” என்றும் கேட்டார்.

 அத்துடன், நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் தாலூக்காவுக்காகவும் பணிக்கர் என்னுடன் வழக்காடினார். ஆதிக்க உணர்வை வெளிப்படுத்தியதற்காகக் கேரள காங்கிரசாரிடமோ, பணிக்கரிடமோ எனக்குக் கோபம் ஏற்படவில்லை.

 ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்த இனத்தின் நலனுக்காகத்தான் போராடினார்கள்; சுயநலத்திற்காக அல்ல! 

அதே நேரத்தில் தமிழ்நாடு காங்கிரசும், தமிழரான திரு. காமராசரை முதல்வராகக் கொண்டிருந்த சென்னை மாநில (தமிழக) அரசும் இன உணர்ச்சியற்ற முறையில் செயல்பட்டன. 
அவற்றின் மீதுதான் நான் கோபப்பட்டேன்! 

சர்தார் பணிக்கரின் போக்கை அறிந்தபோதே, தேவி குளம், பீருமேடு தலுக்காக்கள் தமிழகத்திற்குக் கிடைக்கா வென்பது எனக்குப் புலனாகிவிட்டது. 

கூடலூரும் போய் விடக் கூடுமோ என்றும் அஞ்சினேன். நேருஜி மீது எல்லையற்ற செல்வாக்குப் பெற்றிருந்த வி.கே.மேனன் அவர்களும், குமரி முதல் கோகர்ணம் வரை ஐக்கிய கேரளம் அமைவதற்குத் திரைமறைவில் வேலை செய்தார்!" 

👉 (ம.பொ.சி. எழுதிய 'எனது போராட்டம்' நூலிலிருந்து...)

பதிவு - கதிர்நிலவன் கவின். 🌹🌹

Tamilthesiyan.wordpress.com

Comments

Popular posts from this blog

பார்ப்பன அடிமை அண்ணாலை அரசருக்கு பல்லக்கு தூக்கிய பெரியார்!

ஈவெரா- மணியம்மை திருமணம்! - கி.ஆ.பெ.விசுவநாதம்

ஈ.வெ.கி.சம்பத்துக்காக காங்கிரஸ் ஆதரவை விலக்கிய பெரியார்